இலங்கை இராணுவத்தின் அதிர்ச்சி தரும் படுகொலைகள் அம்பலம்

 

 

 

 

         இன்று பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் உள்ள இராணுவ வதைமுகாமில், உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாத நிலையில் தமிழ் இளைஞர்களை நிர்வானமாக்கி, தலையில் சுடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அதிர்ச்சியான இந்த புகைப்படங்களும் காணொளிகளும் எவ்வாறு வெளிவந்தன என்று தொலைக்காட்சி சித்தரித்துள்ளது.

தமிழர்கள் மீது இனப்படுகொலை நடக்கவில்லை என வாய்கிழிய குரல்கொடுத்துவரும், இலங்கை-இந்திய அரசுகள், மற்றும் அதன் நேச நாடுகள் வெட்கி நாணும் வகையில், இலங்கை இராணுவம் அரக்கத்தனமான காரியங்களில் ஈடுபடுகிறது. ஈராக்கில் பக்தாத் சிறையில் அமெரிக்க துருப்புக்கள் இவ்வாறு ஈராக்கியர்களைக் கொன்றுகுவித்தது.

ஆனால் பின்னர் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டார்கள்,  இலங்கைத் தீவில் நடப்பதை எந்த வெளிநாடுகளும் பாராமுகமாக இருக்கின்றன. அங்கே எம் தமிழ் உறவுகள் நாளுக்கு நாள் செத்துமடிந்தவண்ணம் உள்ளனர். தமிழ் இளைஞர்கள், மற்றும் யுவதிகளைக் முழு நிர்வாணமாக்கி கண்ணைக் கட்டி துப்பாகியால் ஈவிரக்கமின்றி சுடும் சிங்கள அரக்கர்களுடனா நாம் இனிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போகிறோம்.

எம் இனம் அங்கே சிறுகச் சிறுக வெளியுலகிற்குத் தெரியாமல் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதே யதார்த்தம். 

புலம்பெயர் தமிழர்களே சிந்தியுங்கள் ! இனி நாம் என்னசெய்யப்போகிறோம் என்று.

       கே.பியின் கைது வெளிவராத சில உண்மைகள் : அதிர்ச்சித் தகவல்

கே.பி எவ்வாறு கைதுசெய்யப்பட்டார், எங்கு கொண்டு செல்லப்பட்டார் என பல தகவல்கள் உலாவந்தவண்ணம் உள்ளன, கற்பனையின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற சில இணையத்தளங்கள், அவர் தானாகச் சென்று சரணடைந்தார் என்று கூட எழுதித்தள்ளியுள்ளார்கள். உண்மை சற்று தாமதமாக வெளியே வருகின்றது. அதிர்வு இணைய வாசகர்களுக்காக கொழும்பில் இருந்து வந்த தகவலை வழங்குகிறோம்.
கே.பியைப் பற்றி எந்த ஒரு இரகசியத்தையும் வெளியிடக் கூடாது என கோத்தபாய கொழும்பில் உள்ள அனைத்துப் பத்திரிகைகளுக்கும் தனிப்பட்ட ரீதியில் மிரட்டல் விடுத்துள்ளார்.
தற்போது கிடைக்கப்பெற்ற தகவலின் படி கொழும்பில் உள்ள ஒரு தனிப்பட்ட மிகவும் இரகசியமான இடம் ஒன்றில் கே.பி வைக்கப்பட்டிருப்பதாகவும், தேசிய புலனாய்வுத் துறையின் இயக்குனர் கபில் கேண்டவிதாரன, அவரிடம் விசாரணைகளை நடத்திவருவதாகவும் அறியப்படுகிறது. கே.பி யிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் அவர் பதில் கூற மறுப்பதாகவும், அப்படிக் கூறினாலும், பொட்டு அம்மானுக்கே அது தெரியும் என்று கூறிவருவதால், விசாரணை நடத்துவோரால், பல விடயங்களைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது.


இருப்பினும் காலப்போக்கில் அவர் சில உண்மைகளைக் கக்குவார் அல்லது சித்திரவதைகளைத் தீவீரப்படுத்தும் நோக்கம் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுவரை அவர் கூறியதாக வெளிவந்த, அனைத்துச் செய்திகளும் பொய்யான கற்பனையே என்கிறார்கள், அவரை விசாரிக்கும் புலனாய்வு அதிகாரிகள். கொழும்பில் உள்ள சில நாளிதழ்கள் வியாபார நோக்கத்திற்காக, கே.பி, சில விடயங்களைக் கூறியதாகச் செய்திகளை வெளியிட அவற்றை தமிழ் இணையங்களும் செய்தியாகப் பிரசுரித்துள்ளனவே அன்றி, இதுவரை அவர் வாயை திறக்கவில்லை என்பதே உண்மை.
எவ்வாறு கைது நடந்தது:
கே.பி கைதானது இது ஒன்றும் முதல் தடவை அல்ல, தாய்லாந்தில் 2007ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ம் திகதி கே.பி கைதுசெய்யப்பட்டிருந்தார். இருப்பினும் தாய்லாந்து அரசாங்கம் அவரை நாடுகடத்தவில்லை. பின்னர் அவர் சில நாடுகளின் தலையீடு காரணமாக விடுவிக்கப்பட்டார். இருப்பினும் இம் முறை இலங்கை அரசு வித்தியாசமாக இதனைக் கையாண்டுள்ளது. கே.பி கைதுசெய்யமுன்னர் வந்த தொலைபேசி அழைப்பு தயாமோகனிடம் இருந்து வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கு முன்னரும் ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், இருப்பினும் அவர் அந்த தொலைபேசி அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், பின்னர் வந்த தயாமோகனின் அழைப்பை ஏற்றுக் கதைத்த அவர், சைகையால் அங்கு நின்ற நடேசனின் தம்பியாரிடம், கொஞ்சம் பொறுங்கள் தான் வெளியேசென்று கதைத்துவிட்டு வருவதாகக் கூறியுள்ளார். தனது கண்ணாடியை அவர் மேசை ஒன்றின் மீது கழற்றிவைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.
தயாமோகனுடன் சுமார் 15 நிமிடங்கள் உரையாடிய அவர், தொலைபேசியை துண்டித்தபோது, வேறு ஒரு அழைப்பு வந்தது அந்த அழைப்பில் அவர் பேசியவண்ணம் கீழே இறங்கி ரியூன் கோட்டலின் சுவருக்கு அருகாமையில் சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே அவர் சுற்றிவழைக்கப்பட்டிருந்தார

 
                                 
 
                                                       கைது செய்தது யார்? என்பது அவருக்குத் தெரியாது.


ஆம் அவரைக் கைது செய்தது Malaysian Special Bureau (MSB ) மலேசியாவின் ஸ்பெசல் பியூரோ ஏஜன்ட். மலேசியாவில் இயங்கும் மலேசிய ஸ்பெசல் பியூரோ அமைப்பு மலேசிய முடியரசின் அபிமானத்திற்குரிய, மற்றும் நம்பிக்கைக்குரிய அமைப்பாகும், இவர்களின் நடவடிக்கையை போலீசார் கட்டுப்பத்த முடியாது, மற்றும் இவர்களின் நடவடிக்கை பற்றி மலேசியப் போலீசார் அறிந்திருக்கவும் மாட்டார்கள்.
இரண்டாவது தொலைபேசி அழைப்பை மேற்கொண்டவர் தமது அமைப்புக்கு உதவியவர் என மலேசிய ஸ்பெசல் பியூரோவினர் தெரிவித்துள்ளனர்.
5ம் திகதி புதன்கிழமை மாலை சுமார் 3.00 மணியளவில் அவர் மலேசிய ஸ்பெசல் பியூரோ ஏஜன்ட்டுகளால் கைது செய்யப்பட்டார். கே.பியின் வாகன சாரதி அப்பு என்றழைக்கப்படுபவரும் கைது செய்யப்பட்டார். அவர்கள் இருவரும் உடனடியாக பாங்கொக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஏன் பாங்கொக் ? மலேசியாவில் இருந்து கொழும்புகொண்டு சென்றிருக்கலாமே ?
மலேசியாவில் உள்ள தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்து அமைப்புக்களுடன் கே.பி தொடர்புகளை சமீபத்தில் ஏற்படுத்தியிருந்ததே கே.பியின் கைதுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. மலேசியாவில் உள்ள ஹிந்துராப் அமைப்புடன் கே.பி தொடர்புகளை மேற்கொண்டதால், மலேசிய அரசாங்கம் அதிர்ச்சிக்குள்ளானது, ஏற்கனவே அங்கு வாழும் தமிழர்கள், மலேசியாவில் தமக்கு சம உரிமையில்லை என்றும் தம்மை ஒரு இரண்டாம் தர குடிமக்களாகவே அரசு கருதுவதாகவும் கூறிப் பலபோராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந் நிலையில் கே.பி யின் இந்த நடவடிக்கை மலேசிய அரசுக்குப் பெரும் திண்டாட்டமாக இருந்தது. கே.பியை தாமே கைதுசெய்து நாடுகடத்தியதாக மலேசிய அரசாங்கம் ஒப்புக்கொள்ளுமேயானால் அது அங்கு வாழும் தமிழர்களிடம் மேலும் பல சிக்கல்களைத் தோற்றுவிக்கும் என அஞ்சிய மலேசியா, கைதுசெய்த கே.பியை உடனே பாங்கொக்கிற்கு கொண்டுசென்றது. ஆக இரண்டு இலங்கை புலனாய்வு அதிகாரிகள் பிரசன்னமாகியிருந்தனர். கே.பி மலேசியாவில் கைதாகும் போது, அவர்கள் இருவரும் காரில் அமர்ந்திருந்தனர். இதுவே உண்மை
ஆனால், தாமே கே.பியை கைதுசெய்தோம், எந்த நாட்டிற்கும் சென்று எவரையும் கைதுசெய்ய முடியும் என்று இலங்கை அரசு கொக்கரித்தது எல்லாம் படு பீலா. சொந்த நாட்டில் உள்ளவர்களையே ஒழுங்காக கைதுசெய்ய முடியாத கையாலாகாத இலங்கை புலனாய்வுப் பிரிவினர், நாடுவிட்டு நாடுசென்றா கைதுசெய்யமுடியும்? செய்மதி தொலைபேசியூடாக நடமாட்டத்தை கண்காணித்தே தாம் இந்தக் கைதை மேற்கொண்டதாக இலங்கை அரசு படு உடான்ஸ் விட்டது, காரணம் மலேசியா வாய் திறக்காது என்பது அவர்களுக்குத் தெரியும்.
5ம் திகதி மாலை சுமார் 3.00 மணியளவில் மலேசியாவில் இருந்து கோத்தபாய ராஜபக்சவின் கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்ததாக் கூறப்படுகிறது. அதில் பேசிய ஜெனரல் உதய பெரேரா, கே.பி கைதான விடயத்தைக் கூறியிருக்கிறார். உடனடியாக இலங்கை இராணுவ விமானத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்றில், கேணல் ஷாலில் தலைமையில் சில அதிகாரிகள் பாங்கொக் விமான நிலையத்திற்குப் புறப்பட்டுள்ளனர்.

இலங்கை விமானப்படையினர் பாங்கொக் விமான நிலையத்திற்குப் பல தடவைகள் பறப்பில் ஈடுபட்டிருந்ததாகவும், பாங்கொக் நகரமே கே.பியை இலங்கைக்கு அழைத்துவர ஏற்றது என இலங்கை அதிகாரிகள் மலேசியாவிடம் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அங்கு சென்ற கேணல் ஷாலில் கே.பியையும் அவரது வாகன சாரதி அப்புவையும் இலங்கை கொண்டு சென்றனர்.
சீன அரசாங்கம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது
இது இவ்வாறிருக்க கே.பியின் கைது காரணமாக தமிழ் மக்களை விட அதிர்ச்சியில் இருப்பது சீன அரசாங்கமே. ஏன் என்றால், புலிகளின் மொத்த ஆயுதக் கொள்வனவில் பாதிக்குமேல் ஆயுதங்களை வழங்கும் முக்கிய நாடாகச் சீனா விளங்கியுள்ளது. இலங்கையுடன் நல்ல நட்புறவைப் பேணிவரும் சீனா மறுபக்கத்தில் புலிகளுக்கும் பல நவீன ஆயுதங்களை வழங்கியுள்ளது. இலங்கை அரசிற்கு தான் கொடுத்த ஆயுதங்களின் விபரங்களையும் சொல்லி அதனைவிட அதி நவீன ஆயுதங்களைப் புலிகளுக்கு விற்று, நாடகம் ஆடியது சீன அரசு. தற்போது இந்தியாவிற்கு தலையிடியை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கையுடன் கைகோத்து நிற்கும் சீனா கே.பியின் கைதுதொடர்பாக படு அதிர்ச்சியடைந்துள்ளது.
இராணுவம் கூறும் ஊர்ஜிதமற்ற தகவல்கள்:
இலங்கை இராணுவத்தின் கூற்றுப் படி தளபதி ராம் தம்மிடம் அக்கரைப்பற்றில் வந்து சரணடைந்ததாகவும், ராமை வைத்து கே.பி மற்றும் சில முக்கியமான நபர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியதாகவும் கூறுகின்றனர். ராம் காட்டில் இருப்பதாக் கூறி அவரே தொலைபேசியில் உரையாடியதால், பல விடையங்கள் வெளிவந்ததாகக் கூறப்படுகிறது. கே.பியுடன் தொடர்ந்து உரையாடிவந்த தளபதி ராம், கே.பி மலேசியாவில் இருந்து புறப்பட இருந்த தேதிகளையும் இராணுவத்திற்குக் கூறியதாக ஊர்ஜிதமற்ற இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், அந்த இயக்கத்தை அரசியல் ரீதியாகப் பலப்படுத்துவதை கே.பி மேற்கொண்டதும், அமெரிக்க அரசில் அவர் கொண்டிருந்த செல்வாக்கும் இலங்கை அரசு அவரைக் கைதுசெய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது எனலாம். கடைசி நாட்களில் அவர் தனது பாதுகாப்பில் அக்கறை செலுத்தவில்லை என்பது எல்லோராலும் தெரிவிக்கப்படும் ஓர் விடையமாகும்.

எது எவ்வாறு இருப்பினும் கே.பியை இலங்கை நீதிமன்றில் ஆஜர் படுத்தி முறையான விசாரணையை நடத்த இலங்கை அரசிற்கு உலகநாடுகள் அழுத்தம் கொடுக்கவேண்டும். அதற்கான ஏற்பாடுகளை புலம்பெயர் தமிழர்கள் மேற்கொள்ளவேண்டும்.

    ராகுல் காந்தியுடன் கைகோர்க்கும் நடிகர் விஜய் விபரீதம் ஆரம்பம் ?

 

 

  

தமிழ் நாட்டின் முன்னனி நடிகரான விஜய்க்கு அரசியலில் இறங்கும் ஆர்வம் வந்துள்ளது. தவறில்லை இருப்பினும் சோனியா காந்தியுடனும், ஈழத்தமிழர்களை அவதூறாகப் பேசிய ராகுல் காந்தியிடமும் கூட்டுச்சேர  முனைவதே அவர் பெரும் தவறிழைக்கிறார் என்பதைக் காட்டுகிறது. இன்று (புதன்கிழமை) டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் அமைப்பின் இளைஞரணித் தலைவரும், சோனியாவின் மகனுமான ராகுல் காந்தியுடன் நடிகர் விஜய் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்ற திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது.

ஜங்கரன் இன்டர் நேசனல் நிறுவனம் ஊடாக இநடிகர் விஜய் நடிக்கும் பெரும்பாலான படங்கள் புலம் பெயர் இலங்கைத் தமிழர்களால் விரும்பிப் பார்க்கப்படுவதுடன் கோடிக்கணக்கான வெளிநாட்டுக் காசை தயாரிப்பாளர்கள் இதன்மூலம் பெற்றுவருகின்றனர்.  இந் நிலையில் ஈழ யுத்தத்திற்கு இந்திய மத்திய அரசான காங்கிரஸ், இலங்கையுடன் கைகோத்து ஆயுத உதவிகளையும், புலனாய்வு உதவிகளையும் வழங்கியதும் இதனால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதும் யாவரும் அறிவர்.

இந் நிலையில் நடிகர் விஜய் எந்தத் துணிச்சலில் சோனியாவுடன் கைகோக்கிறார் என்பது ஆச்சரியமூட்டுகிறது. ஜங்ரன் இன்டர் நாசனல் நிறுவனம் விஜய்யை வைத்து பல படங்களை எடுத்துள்ள நிலையில் மேலும் சில படங்கள் நடிக்க நடிகர் விஜய் ஒத்துக்கொண்டுள்ள நிலையிலும் இந்தப் புதுச் சர்சை கிளம்பியுள்ளது. இவரது இந்த நடவடிக்கை ஈழத் தமிழர்களையும் தமிழ் நாட்டிலுள்ள அனைத்து தமிழ் உணர்வாளர்களையும் இது பாதித்துள்ளது.

இனி வரும் காலங்களில் நடிகர் விஜய்யின் படங்களைத் தமிழ் மக்கள் புறக்கணிக்கவும் வாய்ப்புண்டு. இதனால் இவர் தனது நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பதில் கூறவேண்டும் என்பதே தமிழர்களின் வேண்டுகோள்.

Rechercher dans le site

© 2009 Tous droits réservés.

Site web professionnel