இலங்கை இராணுவத்தின் அதிர்ச்சி தரும் படுகொலைகள் அம்பலம்
25/08/2009 22:33
இன்று பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் உள்ள இராணுவ வதைமுகாமில், உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாத நிலையில் தமிழ் இளைஞர்களை நிர்வானமாக்கி, தலையில் சுடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அதிர்ச்சியான இந்த புகைப்படங்களும் காணொளிகளும் எவ்வாறு வெளிவந்தன என்று தொலைக்காட்சி சித்தரித்துள்ளது.
தமிழர்கள் மீது இனப்படுகொலை நடக்கவில்லை என வாய்கிழிய குரல்கொடுத்துவரும், இலங்கை-இந்திய அரசுகள், மற்றும் அதன் நேச நாடுகள் வெட்கி நாணும் வகையில், இலங்கை இராணுவம் அரக்கத்தனமான காரியங்களில் ஈடுபடுகிறது. ஈராக்கில் பக்தாத் சிறையில் அமெரிக்க துருப்புக்கள் இவ்வாறு ஈராக்கியர்களைக் கொன்றுகுவித்தது.
ஆனால் பின்னர் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டார்கள், இலங்கைத் தீவில் நடப்பதை எந்த வெளிநாடுகளும் பாராமுகமாக இருக்கின்றன. அங்கே எம் தமிழ் உறவுகள் நாளுக்கு நாள் செத்துமடிந்தவண்ணம் உள்ளனர். தமிழ் இளைஞர்கள், மற்றும் யுவதிகளைக் முழு நிர்வாணமாக்கி கண்ணைக் கட்டி துப்பாகியால் ஈவிரக்கமின்றி சுடும் சிங்கள அரக்கர்களுடனா நாம் இனிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போகிறோம்.
எம் இனம் அங்கே சிறுகச் சிறுக வெளியுலகிற்குத் தெரியாமல் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதே யதார்த்தம்.
புலம்பெயர் தமிழர்களே சிந்தியுங்கள் ! இனி நாம் என்னசெய்யப்போகிறோம் என்று.
———
Précédent
