புலிகளை தடைசெய்ய பாவிக்கப்பட்ட சட்டம் தொடர்பாக அமெரிக்காவில் வழக்கு!!

26/08/2009 16:33

அமெரிக்காவில் விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் கேடிஷ் விடுதலை அமைப்புகளைத் தடைசெய்தமை குறித்தும் அதற்காகப் பயன்படுத்தப்பட்ட சட்டம் தொடர்பாகவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஜோர்ஜ் டபிள்யூ புஷ் அரசாங்கத்தால் முதன் முதலில் புலிகளைத் தடைசெய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. சர்வதேச அவசரகால பொருளாதாரச் சட்டம் (1977) கீழ் இந்த உத்தரவை அப்போதைய அமெரிக்க அரசாங்கம் விடுத்திருந்தது.

இச் சட்டத்திற்கு எதிராகவே முதன் முதலில் அமெரிக்க நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இதை பல சிங்கள இணையங்கள் புலிகள் மீதுள்ள தடையை நீக்கக்கோரி போடப்பட்ட மனு தள்ளுபடியானதாக பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. உண்மையில் வெளிநாட்டு இயக்கம் ஒன்றை தடைசெய்ய ஏதுவாகவுள்ள 1977ம் ஆண்டு சட்ட வரைவு நீக்கப்படவேண்டும் என்றே இந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

அத்துடன் அது ஒரு அமெரிக்கரின் அடிப்படை உரிமையை மீறும் சட்டம் எனவும் சட்டவல்லுனர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. இருப்பினும் நீதிபதிகள் அதனை நிராகரித்ததோடு அச்சட்டம் தொடர்பாக தமது நிலைப்பாட்ட்டில் மாற்றமில்லை எனத் தெரிவித்தனர். அத்தோடு இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

Précédent

Rechercher dans le site

© 2009 Tous droits réservés.

Site e-commerce gratuit