இலங்கை மீது போர்க்குற்றவிசாரணை நடத்தப்படவேண்டும்: எரிக் சொல்ஹெய்ம்
28/08/2009 22:57
சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட, இலங்கை இராணுவத்தின் படுகொலை காட்சிகள் தொடர்பில் இலங்கை மீது போர்க் குற்ற விசாரணைகளை ஐ.நா. சபை முன்னெடுக்க வேண்டும் என்று நோர்வே வெறியுறவுத்துறை அமைச்சரும், முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் வலியுறுத்தியுள்ளார்.
நோர்வேக்கு ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்யவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் இது விஷயம் தொடர்பாக வலியுறுத்தவுள்ளதாக எரிக் சொல்ஹெய்ம் மேலும் தெரிவித்துள்ளார்.
நிர்வாணமாக்கப்பட்டு, கண்கள் கட்டப்பட்ட நிலையில் இலங்கை இராணுவத்தினரால் தமிழ் இளைஞர்கள் கோரமாக படுகொலை செய்யப்பட்ட, சேனல் 4 வெளியிட்டிருந்த காட்சிகள் தொடர்பான செய்தியையும் படங்களையும் நோர்வே ஊடகங்களும் வெளியிட்டிருந்தது.
இந்த காட்சிகள் உண்மையாக இருந்தால் அது ஆச்சரியத்திற்கு உரியதல்ல எனவும் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
———
Précédent
